நடைபாதையில் வைக்கப்பட்ட குழாய்கள் அகற்றப்படுமா?

Update: 2022-12-21 15:21 GMT

பெங்களூரு கைகொண்டரஹள்ளி பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியின் கரையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏரியின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள நடைபாதையில் பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் பாதசாரிகளும், ஏரிக்கு நடைபயிற்சியில் ஈடுபட வருபவர்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு குழாய்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்