மதுரை மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நகைபறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் திருடர்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பெண்கள், பணி முடிந்து வீடு திரும்புவோரை வழிமறித்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் அமைத்து திருட்டு நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும் இடங்களில் போலீசாரின் இரவுரோந்தை மேம்படுத்த வேண்டும்.