
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நிழல் தரும் மரங்களான புளிய மரங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள புளிய மரத்தில் பெரிய துவாரம் ஏற்பட்டு எந்த நேரத்திலும் தார் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புளியமரம் தார் சாலையில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலையில் இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.