பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதன் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் உள்ளது. இந்த கழிப்பறைகளை முறையாக பராமரிப்பதில்லை. போதிய தண்ணீர் வசதியும் இல்லை. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.