சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே வருகிறது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்திற்கென புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.