மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை அருகே சேத்திரப்பாலபுரம் ஊராட்சி அரையபுரம் பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். தற்போது காற்று மிகவும் பலமாக வீசி வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துசேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரையபுரம், கிராம பொதுமக்கள்.