விருத்தாசலம் தாலுகா கோட்டேரி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 14 மாதங்கள் ஆகிறது. பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் இதுவரை முடியவில்லை. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.