வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-18 12:04 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பட்டவர்த்தி சாலையில் திருநகரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்பொழுது ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் போல மண்டி கிடக்கிறது. இந்த வாய்க்காலை தூர்வாரினால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும், இதானல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வைத்தீஸ்வரன் கோவில்.

மேலும் செய்திகள்