சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

Update: 2022-12-18 12:28 GMT

நாகை மாவட்டம் கீழபூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு அரசின் நலதிட்டங்களை பெற்று வந்தனர். இந்த அலுவலகம் பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த அலுவலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பழைய அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்