கணபதிபுரம் லெமூர் கடற்கரை செல்லும் சாலையில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த அரங்கமும், பயிற்சி மையமும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி மையத்தையும் சீரமைத்து அப்பகுதி மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், கணபதிபுரம்.