ஆற்றூர் சந்திப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயன்று வருகின்றனர். இந்த மையத்தின் கதவுகள் சேதமடைந்தது. தற்போது கதவுகளின்றி காணப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடனேயே அங்கு படிக்க விட்டு செல்கின்றனர். எனவே, குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையத்திற்கு புதிய கதவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்குமார், ஆற்றூர்.