அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஈச்சன்விளை கிராமத்தில் இருந்து தொடங்கி பூஜபுரவிளை வரை தலகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும், பாசி படர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.