ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட சனவேலி ஊராட்சியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதானல் சாலையில் செல்லும்போது தெருநாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கிறது. இரவில் சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது. மேலும் சாலையிலேயே படுத்து உறங்கி விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
நாகவள்ளி, ராஜசிங்கமங்கலம்