தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சக்கரபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் கோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கோபுரத்தின் உறுதித்தன்மைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், பக்தர்களின் கோரிக்கையாகும்.
.