காளையார்கோவில் அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அரசு சார்பில் அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவியர், காளையார்கோவில்