ஆற்றுபாலம் வேண்டும்

Update: 2022-07-18 11:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நீர்குன்றம்-கட்டவிளாகம் இடையே வைகையாறு ஓடுகிறது. கட்டவிளாகத்தில் இருந்து பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் நீர்குன்றத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆற்றை கடக்க ஆற்றுப்பாலம் கிடையாது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி இந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் நேர விரயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஊருக்கு இடையே ஓடும் ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்.

மாறன், திருவாடானை.

மேலும் செய்திகள்