நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-18 11:19 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் இருபுறத்தில் உள்ள இரண்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கேட்டில் ஒன்று மட்டும் இயங்கி வருகிறது. மற்றொரு கேட் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் அவரச  காலத்தில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த இரு நுழைவு வாயில்களும் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

நசீமாபேகம், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்