திட்டச்சேரி பேரூராட்சியில் பெருமாள் மேல வீதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்த அதிகாரிகள் உடனே கால்வாயை பணியாளர்கள் கொண்டு தூர்வாரினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.