குழிகளாக மாறிய சாலைகள்

Update: 2022-12-14 13:23 GMT
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பெங்களூரு சாலை மற்றும் சென்னை சாலையில் பல இடங்களில் தார்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலைகள் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலையில் தொடங்கி பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்