தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்- கழுகுமலை ரோடு மலையான்குளம் விலக்கு அருகில் மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிப்பதாக மகாலிங்கம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.