தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோடு ராமசாமி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.