குடிநீர் எந்திரம் பழுது

Update: 2022-12-14 09:53 GMT

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் குடிநீர் வழங்கும் எந்திரம் பழுதாகி கிடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் வழங்கும் எந்திரத்தை சீரமைத்து, மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்