மரம் அகற்றப்படுமா?

Update: 2022-12-14 07:50 GMT

திருவிதாங்கோடு பேரூராட்சி உட்பட்ட வயல்வெளி குளத்தின் கரையில் சாலை உள்ளது. இந்த சாலையை அந்த பகுதி விவசாயிகள், வயலுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையோரம் பட்டுப்போன நிலையில் ஒரு மரம் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் விவசாயிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்றுவார்களா?.

-டி.ஆல்பர்ட், மைலோடு.

மேலும் செய்திகள்