திருப்பூர், பி.என்.ரோடு நெசவாளர் காலனியில் சாலையில் அதிகளவில் மண் குவியல் காணப்படுகிறது. தற்போது காற்று காலம் என்பதால் காற்றில் மண் பறந்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலால் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலையில் உள்ள மண் குவியலை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்புராஜ், திருப்பூர்.