ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கானாங்காடு பகுதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கிராம சேவை மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.