சங்கராபுரம் தாலுகா ராவத்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம் பயன்பாடின்றி பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களும் வீணாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆகவே நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.