திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உப்பூர் ஆலங்காடு நெடுஞ்சாலை பகுதியில் ஆதரவற்றோர்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றனர். வாகனங்கள் செல்லும் போது திடீரென சாலையை கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள எதிர்பார்க்கின்றனர்.