கோழிக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-17 18:17 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் ரோட்டில் சுமார் 4-க்கும் மேற்பட்ட கறிக்கோழிக்கடைகள் உள்ளன. இந்த கறிக்கோழிக்கடைகளில் இருந்து கோழி இறகுகள், குடல்கள் உள்ளிட்ட கழிவுகளை கடை உரிமையாளர்கள் சிதம்பரம் சாலையோரத்திலும், உய்யகொண்டான் ஏரியிலும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்