சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வெள்ளார் கிராமம் பொம்மசமுத்திரம் தெருவில் கிணறு உள்ளது. அந்த கிணற்றை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு மனு அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கிணற்றை மீட்டு பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், வெள்ளார், சேலம்.