சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் அய்யம்புதூர் கிராமத்திற்கு பொது மயானம் உள்ளது. அந்த மயானம் பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் மயானத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி ஏற்படுத்தி, செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.