நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சுமார் 20-க்கும் கடைகள் இருந்தன. அந்த கடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பஸ் நிலையம் அமைப்பதாக தெரிவித்து அகற்றினர். ஆனால் அதற்கான பணிகள் தாமதமாகி வருகிறது. மேலும் அங்கு வந்து பிற ஊர்களுக்கு பஸ்சுக்காக செல்பவர்கள் நிற்கும்போது வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு விரைவாக நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-கிருஷ்ணா, சேந்தமங்கலம், நாமக்கல்.