தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சி பகுதியில் உடையார் குடியிருப்பு தெருவில் குடியிருப்புக்கு நடுவே பயன்பாட்டில் இல்லாத பொது கிணறு மூடப்படாமல் உள்ளது. இந்த கிணற்றை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதனால் இங்கு வசிக்கும் குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே கிணற்றின் மேற்பகுதிக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, தர்மபுரி.