தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ரெட்டியூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அங்கன்வாடி மையம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு அரசு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, பாலக்கோடு, தர்மபுரி.