கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த நிழல்குடையை தற்போது சர்வீஸ் சாலை அருகே சேறும், சகதியுமாக உள்ள இடத்தில் போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக நிழற்குடையின் தகரங்கள் சேற்றில் கிடப்பதால் வீணாகி வருகிறது. எனவே சேரும் சகதியுமாக உள்ள இடத்தில் கிடக்கும் பயணிகள் நிழ்குடையை மேடான பகுதியில் அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.