நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-07 16:31 GMT

கிருஷ்ணகிரி நகரின் மைய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. தினமும் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இங்கு ஓசூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் சுகாதார வளாகங்கள் உள்ளன. இந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் அந்த இடத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்