மயிலாடுதுறை மாவட்டம் அரசினர் பெரியார் ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களை பார்வையாளர்கள் பார்க்க காலை மாலை அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த கட்டிடத்தின் நுழைவுவாயிலில் பெண்களும் ஆண்களும் கூட்டமாக கால்கடுக்க நிற்கின்றனர். வெயில், மழை பெய்தால் ஒதுங்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஓய்வு அறை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேந்திரன், திருக்கடையூர்.