அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத்தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்டு சாலையில் தற்போது பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது. மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி இப்பகுதியில் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.