ராமநாதபுரம் மாவட்டம், எக்ககுடி ஊராட்சியில்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் 15-கிலோ மீட்டர் தூரம் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிபடுகின்றனர். அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே இந்த ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.