ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சமய நூலகம், சித்த மருத்துவமனை மற்றும் பொதுமக்களின் பொருட்கள் பாதுகாக்கும் அறை ஆகியவை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் பெண்கள் உடைமாற்றும் அறை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. இதனால் வெளியூர் பக்தர்கள் தனியாரையே நாடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.