தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளை தெரு நாய்கள் தொல்லையால் அவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், பாலக்கோடு