தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிபட்டியில் போலீஸ் நிலையம் அருகே அரூர்- சேலம் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை தலைகீழாக தொங்கியவாறு உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை அறிந்து கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மாற்று வழியில் சென்று விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரி செய்து வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ராமலிங்கம், தர்மபுரி