திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கழிவறை, குடிநீர் வசதி இருக்கிறது. ஆனால் தாலுகா அலுவலகத்துக்கு சான்றிதழ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பெற வரும் பொதுமக்களுக்கு கழிவறை, குடிநீர் வசதி இல்லை. இதனால் அவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.