காட்டுமன்னார்கோவில் தாலுகா லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொத்தவால் தெருவில் பழமை வாய்ந்த தாய் சேய் நல விடுதி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்த காரணத்தால் தாய்-சேய் நல விடுதி வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சேதமடைந்த இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் விழும் நிலையில் உள்ளது. இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தாய்-சேய் நல கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.