மதுரை யா.ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 1வது தெரு முதல் 4வது வரை தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொல்லை தரும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.