பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் உள்ள கடை அருகே நடைபாதையில் சிலர் ஜல்லி கற்களை போட்டுள்ளனர். பலநாட்கள் ஆகியும் அவற்றை அகற்றாமல் உள்ளனர். இதனால் அந்த பகுதியினர் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும்.