கோவையை அடுத்த சூலூரில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை முழுவதுமாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.