திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு ஒரே ஒரு கட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனால் வியாபாரிகளும், காய்கறி வாங்க வருபவர்களும் கழிப்பறையை பயன்படுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காந்திமார்க்கெட் வளாகத்தில் கூடுதலாக கழிப்பறை அமைத்து அதனை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.