சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா நாவலூரில் இருந்து வீரகனூர் செல்லும் சாலையில் விவசாய பயன்பாட்டிற்கு கிணறுகள் அமைத்துள்ளனர். அந்த கிணறுகளில் காம்பவுண்டு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் கிணறுக்கு அருகில் செல்வோர், வாகனங்களில் வேகமாக செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கிணறுகளுக்கு காம்பவுண்டு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகரன், தலைவாசல், சேலம்.