தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு சந்தை பகுதியில் சமுதாய சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். எனவே இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், மானியதஅள்ளி, தர்மபுரி.