பண்ருட்டியில் ஒருங்கினைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பொதுக்கழிப்பறை தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கழிப்பறையை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.